CONSTITUTIONAL AMENDMENT TAMIL – INDIAN POLITY NOTES 2023: இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம்

Photo of author

By TNPSC EXAM PORTAL

இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் | Constitutional Amendment Tamil: TNPSC EXAM PORTAL வலைதளத்தில் டிஎன்பிஸ்சி தேர்வு குறித்த கேள்வி பதில்கள், குறிப்புகள் மற்றும் அனைத்து தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

Constitutional Amendment Tamil ➨ (Amendment 1 – 104)

இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் ➨ 1 முதல் 104 வரை 

1-வது திருத்தச்சட்டம் - 1951

நில சீர்திருத்தத்தை பாதுகாப்பதற்காக ஒன்பதாவது  அட்டவணை சேர்க்கப்பட்டது, பேச்சு மற்றும் வெளிப்பாடு  சுதந்திரம், பொது ஒழுங்கு, வெளிநாட்டு அரசுகளுடன் நட்புறவுகள் மற்றும் ஒரு குற்றத்திற்கான தூண்டுதல் ஆகியவற்றின் மீது மூன்று தடைகள் விதிக்கப்பட்டன.

சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கிய  வகுப்புகளின் முன்னேற்றத்திற்கான சிறப்பு ஏற்பாடுகள்  செய்ய மாநிலத்திற்கு அதிகாரம் வழங்குவதாகும்.

2-வது திருத்தச்சட்டம் - 1952

ஒரு உறுப்பினரை 7,50,000 க்கும் அதிகமான நபர்களை பிரதிநிதித்துவப்படுத்தலாம் என்று மக்களவையில்  பிரதிநிதித்துவப்படுத்தும் அளவை சரி செய்யப்பட்டது.

3-வது திருத்தச்சட்டம் - 1954

பொதுமக்களின் நலன் கருதி உணவு பொருள்கள்,கால்நடை தீவனம், கச்சா பருத்தி, பருத்தி விதை மற்றும் மூல சணல் உற்பத்தி மற்றும் விநியோகத்தை  கட்டுப்படுத்த நாடாளுமன்றத்திற்கு தரப்படும் அதிகாரம்.

 4-வது திருத்தச்சட்டம் - 1955

நீதிமன்றங்களுக்கு அப்பால் கட்டாயமாக  கையகப்படுத்தப்படும் தனியார் சொத்துகளுக்கு கொடுக்கப்படும் பதில் இழப்பீட்டு அளவு.

5-வது திருத்தச்சட்டம் - 1955

 மாநிலச் சட்டமன்றங்களுக்கு காலவரையறையை  சரிசெய்ய குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் அளித்தது.

பட்டியல் இனத்திற்கான மற்றும் பழங்குடி இனத்திற்கான  இட ஒதுக்கீடுகளை விரிவுபடுத்தவும் மற்றும் ஆங்கிலோ -,இந்தியர்களுக்கு மக்களவையில் பிரத்யேக  பிரதிநிதித்துவம் மாநில சட்ட மன்றக் கூட்டங்களை பத்து  ஆண்டுகள் வரை (அதாவது 1970 வரை) விரிவாக்கப்படுத்துதல்.

6-வது திருத்தச்சட்டம் - 1956

பத்திரிகைகளைத் தவிர்த்து விற்பனை அல்லது  கொள்முதல் செய்யும் மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வர்த்தம் மற்றும் வாணிபத்திற்கு  விதிக்கப்படும் வரி.

7-வது திருத்தச்சட்டம் - 1956

மாநில மறுசீரமைப்பு.

8-வது திருத்தச்சட்டம்  - 1959

ஜமீன்தார் முறை அகற்றம்.

 9-வது திருத்தச்சட்டம் - 1960

 இந்திய-பாகிஸ்தான் உடன்படிக்கை (1958) படி, மேற்கு  வங்கத்தில் அமைந்திருக்கும் இந்திய ஒன்றிய எல்லைக்குட்பட்ட பெருபரி பகுதி பாகிஸ்தானுக்கு  விட்டுக்கொடுக்க ஏற்படுத்தப்பட்டது.

CONSTITUTIONAL AMENDMENT TAMIL - INDIAN POLITY NOTES 2023
CONSTITUTIONAL AMENDMENT TAMIL – INDIAN POLITY NOTES 2023
10-வது திருத்தச்சட்டம் - 1961

இந்திய ஒன்றியத்தில் தத்ரா மற்றும் நகர் ஹவேலி  இணைக்கப்பட்டது.

11-வது திருத்தச்சட்டம் - 1961

நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு  கூட்டத்திற்குப் பதிலாக ஒரு தேர்வாளர் குழு உதவுவதன்  மூலம் துணைக் குடியரசுத்தலைவரின் தேர்தல் நடைமுறைகளை மாற்றினார்.

குடியரசுத்தலைவரின் அல்லது துணைக்குடியரசுத்தலைவரின் தேர்தலில்  தேர்வாளர் குழு காலியிடத்தில் அடிப்படையில் எதிர்க்க முடியாது என்று வழங்கப்பட்டது.

12-வது திருத்தச்சட்டம் - 1962

இந்திய ஒன்றியத்தில் கோவா, டாமன் மற்றும் டையு  இணைக்கப்பட்டது.

13-வது திருத்தச்சட்டம் -  1962

 நாகாலாந்திற்கு ஒரு மாநில அந்தஸ்து வழங்கியதோடு  அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்தன.

14-வது திருத்தச்சட்டம் -  1962

இந்திய ஒன்றியத்தில் புதுச்சேரி இணைந்தது.

15-வது திருத்தச்சட்டம் - 1963

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 60  முதல் 62 ஆண்டுகள் வரை அதிகரித்தது.

16-வது திருத்தச்சட்டம் - 1963
  • சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள்  மற்றும் இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) ஆகியோரின் உறுதிமொழியில்  இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு போன்ற வடிவில் இருக்கும்.
17-வது திருத்தச்சட்டம் - 1964
  • நிலத்தின் சந்தை மதிப்பை இழப்பீடாக வழங்கப்படவில்லை என்றால், நிலத்தை  கையகப்படுத்தப்படுவதை தடைசெய்தது.
18-வது திருத்தச்சட்டம் - 1966
  • ஒரு புதிய மாநிலத்தை உருவாக்க இது வழிவகுக்கிறது.
  • மேலும் ஒரு யூனியன் பிரதேசத்தையோ அல்லது ஒரு  மாநிலத்தினுடைய யூனியன் பிரதேசத்தையோ ஒன்றாக இணைத்து ஒரு புதிய மாநிலத்தையோ அல்லது ஒரு  புதிய யூனியன் பிரதேசத்தையோ உருவாக்கவும்  அதிகாரமளிக்கிறது.
19-வது திருத்தச்சட்டம் - 1966
  • தீர்ப்பாயங்களின் தேர்தல் முறையை ஒழித்து, தேர்தலை  நடத்த அதிகாரத்தை வழங்கியது.
20-வது திருத்தச்சட்டம் - 1966
  • உச்சநீதிமன்றத்தால் செல்லாதென்று தீர்ப்பளிக்கப்பட்ட  உத்திரபிரதேச மாவட்ட நீதிபதிகளின் நியமனங்கள் உறுதிப்படுத்தப்பட்டது.
21-வது திருத்தச்சட்டம் - 1967
  • எட்டாவது அட்டவணையில் சிந்தி-யை 15-வது  மொழியாகசேர்க்கப்பட்டுள்ளது.
22-வது திருத்தச்சட்டம் - 1969
  • அசாம் மாநிலத்தின் உள்ளேயே, மேகாலயா-வை ஒரு  புதிய சுயாட்சி மாநிலமாக உருவாக்க உதவியது.
23-வது திருத்தச்சட்டம் - 1969
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்களின் இட  ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவது மற்றும்  மக்களவையில்  ஆங்கிலோ-இந்தியர்களுக்கான பிரத்தியேக  பிரதிநிதித்துவம் மற்றும் மாநில சட்டமன்ற  கூட்டங்களுக்கு பத்து ஆண்டுகள் வரை (அதாவது 1980 வரை) விரிவுபடுத்துதல்.
24-வது திருத்தச்சட்டம் - 1971
  • அடிப்படை உரிமைகள் உட்பட அரசமைப்பின் எந்த ஒரு  பகுதியையும் திருத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை  உறுதிப்படுத்தியது.
  • அரசமைப்பு திருத்தச்சட்டம் முன்வரைவுக்கு ஒப்புதல் கொடுப்பதை குடியரசுத்தலைவரிடம் கட்டாயமாக்கியது.
25-வது திருத்தச்சட்டம் - 1971
  • இது அரசு வழிகாட்டு  நெறிமுறைகளில் ஒன்றாகிய  உறுப்பு 39(பி) அல்லது (சி) யைச் செயல்படுத்த கொண்டுவரப்படும் சட்டம் உறுப்புகள் 14, 19 மற்றும் 31  ஆகியவைகளுக்கு முரணாக இருந்தாலும் செல்லும்  என்பதை கூறுகிறது.
CONSTITUTIONAL AMENDMENT TAMIL - INDIAN POLITY NOTES 2023
CONSTITUTIONAL AMENDMENT TAMIL – INDIAN POLITY NOTES 2023
26-வது திருத்தச்சட்டம்-1971
  • சுதேச அரசுகளின் முன்னாள் ஆட்சியாளர்களின்  தனிச்சிறப்பு மற்றும் சலுகைகள் அகற்றப்பட்டன.
27-வது திருத்தச்சட்டம் - 1971
  • சில ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளின் நிர்வாகிகளுக்கு அவசர சட்டம் பிரசுரிப்பதற்காக  அதிகாரமளித்தனர்.
28-வது திருத்தச்சட்டம் - 1972
  • இந்திய குடிமைப் பணி அதிகாரிகளின் சிறப்பு சலுகைகள் அகற்றப்பட்டு, அவர்களின் பணி நிலைமைகளை நிர்ணயிக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்தது.
29-வது திருத்தச்சட்டம் - 1972
  • ஒன்பதாவது அட்டவணையில் நில சீர்திருத்தங்கள்  பற்றிய இரண்டு கேரளா சட்டங்களை சேர்த்தது.
30-வது திருத்தச்சட்டம் - 1972
  • 20,000 தொகையை உள்ளடக்கிய சிவில் வழக்குகளில்  உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்ய  அனுமதித்திருந்த  விதிமுறையை நீக்கி அதற்கு பதிலாக சட்டம் தொடர்பான கேள்வி எழும்போது மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்படலாம்.
31-வது திருத்தச்சட்டம் -  1972
  • மக்களவையின் எண்ணிக்கையை 525-ல் இருந்து 545 ஆக  அதிகரித்தது.
32-வது திருத்தச்சட்டம் - 1973
  • ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கானா பகுதி மக்களுடைய  விருப்பங்களை பூர்த்தி செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
33-வது திருத்தச்சட்டம் - 1974
  • நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் சட்டமன்ற  உறுப்பினர்களின் பதவி விலகலை சபாநாயகர் / தலைவர் மட்டுமே ஏற்க முடியும் அதுவும் அவர்கள் திருப்தி  அடைந்தால் மட்டுமே.
34-வது திருத்தச்சட்டம் - 1974
  • ஒன்பதாவது அட்டவணையில் பல்வேறு மாநிலங்களின்  20க்கு மேற்பட்ட நிலப்பகுதி மற்றும் நில சீர்திருத்த  நடவடிக்கை சட்டங்கள் சேர்க்கப்பட்டது.
35-வது திருத்தச்சட்டம் - 1974
  • சிக்கிமின் பாதுகாப்பற்ற நிலையை நிறுத்தி, அது இந்திய  ஒன்றியத்தின் ஒரு இணை மாநிலத்தின் நிலையை வழங்கியது. இந்திய ஒன்றியத்துடன் சிக்கிம் சங்கத்தின்  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குள் பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
36-வது திருத்தச்சட்டம் - 1975
  • சிக்கிமை, இந்திய ஒன்றியத்தில் முழு மாநிலமாக மாற்றி,பத்தாவது அட்டவணையை தவிர்த்தது.
37-வது திருத்தச்சட்டம் - 1975
  • அருணாச்சல பிரதேசம் ஒன்றிய ஆளுகையிலிருந்த  சட்டசபை மற்றும் அமைச்சர்கள் குழுவை வழங்கியது.
38-வது திருத்தச்சட்டம் - 1975
  • ஒரே நேரத்தில் வெவ்வேறு அடிப்படையில் தேசிய  அவசரகால பிரகடனத்தை பிரகடனப்படுத்த குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் தரப்பட்டது.
39-வது திருத்தச்சட்டம் - 1975
  • குடியரசுத்தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் சபாநாயகர் ஆகியோருடன் நீதித்துறையின்  எல்லைக்கு அப்பால் உள்ள கருத்துவேறுபாடுகள் இடம்பெற்றிருந்தன. அத்தகைய அதிகாரத்தை அவர்கள்  முடிவு செய்ய நாடாளுமன்றத்தால் நிர்ணயிக்கப்படும்.
40-வது திருத்தச்சட்டம் - 1976
  • அவ்வப்போது நீர்ப்பகுதி, கண்டத் திட்டு, சிறப்பு  பொருளாதார மண்டலம் (EEZ) ஆகியவற்றை வரையறுக்க நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளித்தது.
41-வது திருத்தச்சட்டம் - 1976

மாநிலப் பொது ஆணைக்குழு மற்றும் இணைப் பொதுப் பணி  ஆணைக்குழுவின் ஓய்வு வயதை 60 முதல் 62-ஆக உயர்த்தியது.

CONSTITUTIONAL AMENDMENT TAMIL - INDIAN POLITY NOTES 2023
CONSTITUTIONAL AMENDMENT TAMIL – INDIAN POLITY NOTES 2023
42-வது திருத்தச்சட்டம் - 1976
  • இதை ஒரு சிறு அரசமைப்பு என்றழைக்கப்பட்டது.
  • ஸ்வரன் சிங் குழுவின் பரிந்துரைபேரில் சில மாற்றங்கள்செய்யப்பட்டன.
  • இதன் முன்னுரையில் மூன்று புதிய சொற்களை சேர்த்துள்ளது. (மதசார்பற்ற, ஒருமைப்பாடு,சமதர்மம்)
  • குடிமக்களுக்கான அடிப்படை கடமைகளை  சேர்த்தது (புதிய பகுதி IV-A)
  • அமைச்சரவையின் ஆலோசனை முடிவுகள் மூலம் குடியரசுத்தலைவரை  கட்டுப்படுத்தவும் வழிவகை செய்தது.
  • மூன்று புதிய உறுப்புகள் 32அ (சம நீதி மற்றும் இலவசச் சட்ட நீதி),
  • 43அ (தொழிற்சாலைகளின் நிர்வாகத்தில்  தொழிலாளர்களின் பங்கேற்பு) ஆகியவை சேர்க்கப்பட்டன.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு  மற்றும் மேம்பாடு மற்றும் காடுகள், வன விலங்குகளின்  பாதுகாப்பு, நீதிமன்றங்களின் நீதி, அரசமைப்பு மற்றும்  அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகம் ஆகியவை  குறித்த உறுப்புகள் சேர்க்கப்பட்டன.
  • நாட்டின் ஏதாவது  ஒரு பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை நிலவினால், அப்பகுதிக்கு ஆயுதப்படையை அனுப்பி சட்டம் மற்றும்  ஒழுங்கினை நிலைநாட்டவும் அதிகாரமளிக்கிறது.
43-வது திருத்தச்சட்டம் - 1977
  • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள்  நீதித்துறையின் மறுஆய்வு மற்றும் நீதிப்பேராணை ஆகியவற்றின் மூலம் அதிகாரத்தை மீட்டெடுக்கின்றன.
44-வது திருத்தச்சட்டம் -  1978
  • இது குடியரசுத்தலைவருக்கு, மறுசீராய்விற்கு  அமைச்சரவையின் ஆலோசனையை திருப்பி அனுப்பி வைக்க அதிகாரமளிக்கிறது. எனினும், மறுசீராய்வு  ஆலோசனை குடியரசுத்தலைவர் கட்டுப்பட்டவர் ஆவார்.
  • தேசிய அவசரத்தை பொறுத்தவரை ‘ஆயுத கிளர்ச்சி’ என்ற  சொற்களுக்கு பதிலாக ‘உள்நாட்டு அமைதிக் குலைவு’ என்ற சொற்கள் கொண்டு வரப்பட்டன.
  • எழுத்து  வடிவிலான  அமைச்சரவையின் முடிவு அன்றி நெருக்கடி  நிலையைக் குடியரசுத்தலைவர் பிறப்பிக்கக் கூடாது.
  • அடிப்படை உரிமைகள் பட்டியலிலிருந்து சொத்துரிமை  நீக்கப்பட்டு, அதனை சட்டப்பூர்வ உரிமையாக மாற்றியது.
45-வது திருத்தச்சட்டம் - 1980
  • இது மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில்  பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர், ஆங்கிலோ – இந்தியர் ஆகியோருக்கான இட ஒதுக்கீட்டை மேலும் 10  ஆண்டுகளுக்கு நீட்டித்தது.
  • பஞ்சாபில் குடியரசுத்தலைவர் ஆட்சியை ஓராண்டிற்கு மேல் நீட்டிக்க வழிவகை செய்தது.
  • இது போன்ற நீட்டிப்பிற்கு, எந்தவொரு சிறப்பு  நிபந்தனைகள் இல்லாமல் இருக்கலாம்.
46-வது திருத்தச்சட்டம் - 1983
  • மாநிலங்களுக்கிடையேயான  விற்பனை வரி.
47-வது திருத்தச்சட்டம் - 1984
  • அசாம், பீகார், ஹரியானா, தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம்,மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு நிலம் சீர்திருத்தங்கள் இயற்றப்பட்டன.
48-வது திருத்தச்சட்டம் - 1984
  • பஞ்சாபில் நெருக்கடிநிலை இரண்டுகளுக்கு  நீட்டிக்கப்பட்டது.
49-வது திருத்தச்சட்டம் - 1984
  • திரிபுரா மாநிலத்திலுள்ள தன்னாட்சி மாவட்ட சபைக்கு  ஒரு அரசமைப்பை வழங்கியது.
50-வது திருத்தச்சட்டம் - 1984
  • ஆயுதப்படை அல்லது உளவுத்துறை அமைப்புகளுக்காக  அமைக்கப்பட்ட புலனாய்வு அமைப்புகள் மற்றும் தொலைத் தொடர்பு அமைப்புகள் ஆகியவற்றில்  பணியாற்றும் நபர்களின் அடிப்படை உரிமையைக் கட்டுப்படுத்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரமளித்தல்.
51-வது திருத்தச்சட்டம் - 1984
  • மேகாலயா, அருணாச்சல பிரதேசம், நாகலாந்து மற்றும்  மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள பழங்குடியினவர்களுக்கான இட ஒதுக்கீட்டை  மக்களவையிலும் அதேபோல மேகாலயா மற்றும் நாகாலாந்தை சேர்ந்தவர்களுக்கு சட்டமன்ற கூட்டத்திலும்  இடஒதுக்கீடு தரப்பட்டது.
52-வது திருத்தச்சட்டம் - 1985
  • இந்த திருத்தச்சட்டமானது நன்கு அறியப்பட்ட “கட்சி  தாவல் தடை சட்டம் ஆகும். நாடாளுமன்ற  உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்  சட்டமன்ற  உறுப்பினர்கள் கட்சி தாவல் காரணமாக பதவி  இழப்பார்கள். இது தொடர்பான புதிய விவரங்களைப்  பத்தாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
53-வது திருத்தச்சட்டம் - 1986
  • மிசோரம் சம்பந்தமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்து,குறைந்தபட்சம் 40 உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையை உறுதிப்படுத்தப்பட்டது.
54-வது திருத்தச்சட்டம் - 1986
  • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின்  சம்பளத்தை உயர்த்தி, அதனை சாதாரண சட்டத்தின் மூலம் நாடாளுமன்றமே எதிர்காலத்தில் மாற்றிக்கொள்ள  உதவியது.
55-வது திருத்தச்சட்டம் - 1986
  • அருணாச்சல பிரதேசத்தை பொறுத்தவரையில் சிறப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டு குறைந்தபட்சம் 30 உறுப்பினர்கள் கொண்ட அதன் சட்டசபை உறுதிப்படுத்தப்பட்டது.
 56-வது திருத்தச்சட்டம் - 1987
  • குறைந்தது 30 உறுப்பினர்களை கொண்டு கோவா  சட்டமன்றத்தின் வலிமையை நிர்ணயம் செய்யப்பட்டது.
57-வது திருத்தச்சட்டம் - 1987
  • அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மிசோரம் மற்றும்  நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற  கூட்டங்களில்  பழங்குடியினவர்களுக்கான இட ஒதுக்கீடு  செய்யப்பட்டது.
58-வது திருத்தச்சட்டம் - 1987
  • அரசமைப்பின் அதிகாரப்பூர்வ உரைக்கு இந்தி  மொழியில் வழங்கப்பட்டதோடு அரசமைப்பின் இந்திப்  பதிப்பிற்கு அதே சட்டபூர்வமான புனிதத்தன்மையை வழங்கியது.
59-வது திருத்தச்சட்டம் - 1988
  • பஞ்சாப்பில் ஏற்படும் உள்நாட்டு பிரச்சனையின்  அடிப்படையில் தேசிய அவசரநிலை பிரகடனம்  செய்யப்பட்டது.
60-வது திருத்தச்சட்டம் - 1988
  • தொழில், வர்த்தகம், அழைப்புகள் மற்றும் வேலைகள்  மீதான வருடாந்திர வரிகளின் உச்சவரம்பை ரூபாய் 250-ல் இருந்து ரூபாய் 2500 ஆக உயர்த்தப்பட்டது.
 61-வது திருத்தச்சட்டம் - 1989
  • மக்களவை மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களுக்கு  வாக்களிக்கும் வயது வரம்பை 21 வயதிலிருந்து 18  ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
62-வது திருத்தச்சட்டம் - 1989
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீடு மற்றும் ஆங்கிலோ-இந்தியர்களுக்கு பிரத்தியேக  பிரதிநிதித்துவம் மேலும் பத்து ஆண்டுகள் கூடுதலாக (அதாவது, 2000 வரை) மக்களவை மற்றும் மாநில சட்டமன்றக் கூட்டங்களை விரிவுபடுத்தியது.
63-வது திருத்தச்சட்டம் - 1989
  • 1988-ஆம் ஆண்டின் 59-வது திருத்தச்சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களை பஞ்சாப்  தொடர்பானதை நீக்கியது.
  • வேறு வார்த்தைகளில்  கூறுவதானால், பஞ்சாபை அவசரகால  விதிகளுக்கு  உட்பட்ட பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டது.
64-வது திருத்தச்சட்டம் - 1990
  • பஞ்சாபில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மொத்தம்  மூன்றாண்டு ஆறு மாதம் வரை நீட்டிப்பு செய்ய  வழிவகுத்தது.
65-வது திருத்தச்சட்டம் - 1990
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான  சிறப்பு அலுவலருக்கு பதிலாக பல உறுப்பினர்கள்  கொண்ட தேசிய ஆணையத்தை விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்டது.
CONSTITUTIONAL AMENDMENT TAMIL - INDIAN POLITY NOTES 2023
CONSTITUTIONAL AMENDMENT TAMIL – INDIAN POLITY NOTES 2023
66-வது திருத்தச்சட்டம் - 1990
  • மேலும் பல்வேறு மாநிலங்களுக்கான 55 நில சீர்திருத்த  சட்டங்களை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
67-வது திருத்தச்சட்டம் - 1990
  • பஞ்சாபில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மொத்தம்  நான்காண்டு காலம் வரை நீட்டிப்பு செய்ய வழிவகுத்தது.
68-வது திருத்தச்சட்டம் - 1991
  • பஞ்சாபில் குடியரசுத்தலைவர் ஆட்சியை மொத்தம்  ஐந்தாண்டு காலம் வரை நீட்டிப்பு செய்ய வழிவகுத்தது.
69-வது திருத்தச்சட்டம் - 1991
  • தில்லியை தேசிய தலைநகரப் பகுதியாக வடிவமைத்ததன் மூலம் தில்லி ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்கு  சிறப்பிடம் வழங்கப்பட்டது.
70-வது திருத்தச்சட்டம் - 1992
  • தில்லி தேசிய தலைநகரப் பகுதியின் சட்டமன்ற  உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரி ஒன்றிய  ஆளுகைக்குட்பட்ட பகுதி ஆகியவற்றின் உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் தேர்தலில் தேர்வாளர் குழுவில்  சேர்க்க வேண்டும்.
71-வது திருத்தச்சட்டம் - 1992
  • எட்டாவது அட்டவணையில் கொங்கனி, மணிப்புரி  மற்றும் நேபாளி மொழிகள் சேர்க்கப்பட்டன. இதில்,திட்டமிடப்பட்ட மொழிகளின் மொத்த எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.
72-வது திருத்தச்சட்டம் - 1992
  • திரிபுராவின் சட்டமன்றத்தில் பழங்குடியினருக்கு இட  ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
73-வது திருத்தச்சட்டம் - 1992
  • பஞ்சாயத்து-ராஜ் நிறுவனங்களுக்கு அரசமைப்பு  தகுதியும் மற்றும் பாதுகாப்பும் அங்கீகரிக்கப்பட்டது.
  • இதற்காக, ‘பஞ்சாயத்துகள்’ என்ற தலைப்பில் ஒரு புதிய  பகுதி-IX ஐ சேர்த்துள்ளது மற்றும் 29  பொருண்மைகளை  உள்ளடக்கிய ஒரு புதிய பதினோராம் அட்டவணை சேர்க்கப்பட்டுள்ளது.
74-வது திருத்தச்சட்டம் - 1992
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அரசமைப்பு தகுதி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
  • இந்த  நோக்கத்திற்காக ‘நகராட்சிகள்’ என்ற தலைப்பில் ஒரு புதிய திருத்தம் பாகம்-IX இணைத்து, நகராட்சியின் 18  பொருண்மைகளை பன்னிரண்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
75-வது திருத்தச்சட்டம் - 1994
  • குத்தகைக்காரர், உரிமையாளர், உரிமைகள்  போன்றவற்றின் மீதான கட்டுப்பாடு மற்றும்  ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தீர்வுகான வாடகை தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன.
76-வது திருத்தச்சட்டம் - 1994
  • 1994-ஆம் ஆண்டின் தமிழ்நாடு ஒதுக்கீட்டுச் சட்டத்தை (கல்வி நிறுவனங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு  வழங்கப்பட்டது மற்றும் மாநில பணிகளில் பதவிகள் வழங்கப்பட்டது) நீதிபதி மறுபரிசீலனையிலிருந்து பாதுகாக்கும் ஒன்பதாவது அட்டவணையில் இது  சேர்க்கப்பட்டது.
  • 1992இல் உச்ச நீதிமன்றம், மொத்த ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்று  தீர்ப்பளித்தது.
77-வது திருத்தச்சட்டம் - 1995
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு  அரசாங்க வேலைகளில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
78-வது திருத்தச்சட்டம் - 1995
  • ஒன்பதாவது அட்டவணையில் பல்வேறு மாநிலங்களின்  27 சட்டச்சீர்திருத்தங்கள் அடங்கிய சட்டங்கள் உள்ளன.
  • இத்துடன், இந்த அட்டவணையின் மொத்த எண்ணிக்கையானது 282 ஆக அதிகரித்தது, ஆனால்  கடைசி நுழைவு 284 எனக் கணக்கிடப்பட்டது.
79-வது திருத்தச்சட்டம் - 1999
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு மற்றும் மக்களவையில் ஆங்கிலோ- இந்தியர்களுக்கான பிரத்யேக பிரதிநிதித்துவம் பத்துஆண்டுகளுக்கு மேலும் (அதாவது, 2010 வரை) விரிவாக்குதல்.
80-வது திருத்தச்சட்டம் - 2000
  • மத்திய அரசுக்கும் மாநிலத்திற்கும் இடையில்  வருவாய்க்கு ‘அதிகாரப் பகிர்வுக்கான மாற்று திட்டம்’ வழங்கப்பட்டுள்ளது.
CONSTITUTIONAL AMENDMENT TAMIL - INDIAN POLITY NOTES 2023
CONSTITUTIONAL AMENDMENT TAMIL – INDIAN POLITY NOTES 2023
81-வது திருத்தச்சட்டம் - 2000
  • தனித்தனி வகுப்புகளுக்கு ஒரு வருடத்தின் நிரப்பப்படாத ஒதுக்கப்பட்ட காலியிடங்களை அடுத்த ஆண்டு அல்லது ஆண்டுகளில் நிரப்பப்பட பரிசீலிக்க மாநிலத்திற்கு அதிகாரமளித்தல்.
82-வது திருத்தச்சட்டம் - 2000
  • எந்தவொரு தேர்விலும் தகுதி மதிப்பெண்களில்  தளர்த்தல் அல்லது மதிப்பீட்டுத் தரங்களைக் குறைத்தல், ஒன்றியம் மற்றும் மாநிலங்களின் பொதுச் பணிகளுக்கு  ஊக்கமளிக்கும் விஷயங்களில் இட ஒதுக்கீட்டிற்கான பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு  ஆதரவாக எந்தவொரு ஏற்பாட்டையும் செய்வதற்கு வழங்கப்பட்டது.
83-வது திருத்தச்சட்டம் - 2000
  • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பட்டியல்  இனத்தவருக்கு பஞ்சாயத்துகளில் இட ஒதுக்கீடு இல்லை.
84-வது திருத்தச்சட்டம் - 2001
  • மக்கள் தொகை குறைப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் அதே குறிக்கோள்களோடு மற்றொரு 25 ஆண்டுகளுக்கு (அதாவது, 2026 வரை) மக்களவை மற்றும்  மாநில சட்டமன்றங்களில் இடங்களை சீர்படுத்துவதற்கான தடை  நீட்டிக்கப்பட்டது.
85-வது திருத்தச்சட்டம் - 2001
  • 1995-ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை  சார்ந்தவர்களுக்கு இட  ஒதுக்கீட்டின் கீழ் அளிக்கப்படும் பதவி உயர்வு.
86-வது திருத்தச்சட்டம் - 2002
  • ஆரம்பக் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக்கியது.
  • இதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள உறுப்பு 21-அ படி,மாநிலமானது 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி  அளிப்பதை உறுதிப்படுத்துகிறது.
  • உறுப்பு 51-அ கீழ்  அடிப்படை கடைமைகளை சேர்த்துள்ளது அவையாதெனில், இந்திய குடிமகன்களாகிய ஒவ்வொரு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்களது  (6 முதல் 14 வயது வரையிலுள்ள) குழந்தைகளுக்கு கல்வி கற்கும் வாய்ப்பினை கட்டாயம் ஏற்படுத்திக் கொடுக்க  வேண்டும்.
87-வது திருத்தச்சட்டம் - 2003
  • மாநிலங்களில் உள்ள தொகுதிகளை 2001-ஆம் ஆண்டின்  மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சரிபார்பதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் ஏற்படுத்தப்பட்டதாகும்.
  • முன்னர் 84-வது திருத்தச்சட்டத்தின் மூலம் 1991-ஆம்  ஆண்டில் பெறப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்ல.
88-வது திருத்தச்சட்டம் - 2003
  • (உறுப்பு 268-அ) – சேவைகளுக்கு சேவை வரி விதிக்கிறது.
  • இருப்பினும், இதன் வருமானம் சேகரிக்கப்பட்டு, மத்திய மற்றும் மாநிலங்கள் ஆகியவற்றால் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
89-வது திருத்தச்சட்டம் - 2003
  • தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இரண்டாக பிரிக்கப்பட்டது.
  • அவைகள்  தாழ்த்தப்பட்டவருக்கான தேசிய ஆணையம் (உறுப்பு 338) மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்(உறுப்பு 338-அ).
  • இந்த ஆணையத்திற்கான ஒரு தலைவர், துணைத் தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்களை குடியரசுத்தலைவர் நியமிப்பார்.
90-வது திருத்தச்சட்டம் - 2003

போடோலாந்து ஆளுகைக்குட்பட்ட மாவட்டத்திலிருந்து  (உறுப்பு 332 (6)) அசாம் சட்டமன்றத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத  பிரதிநிதித்துவத்தை பராமரிப்பதற்கு வழங்கப்பட்டது.

91-வது திருத்தச்சட்டம் - 2003
  • அமைச்சர்கள் அமைச்சரவையில் மொத்த  அமைச்சர்களின் எண்ணிக்கை (பிரதமர் உட்பட),மக்களவையின் மொத்த வலிமையின் 15% ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது (உறுப்பு 75 (1அ)).
  • ஒரு  மாநிலத்தின் அமைச்சரவையின் அமைச்சர்களின் மொத்த  எண்ணிக்கை (முதலமைச்சர் உட்பட), மாநிலத்தின்  சட்டமன்றத்தின் மொத்த வலிமையின் 15% க்கும் -அதிகமாக இருக்கக்கூடாது.
  • எனினும், ஒரு மாநிலத்தின் அமைச்சர்களின் எண்ணிக்கை (முதலமைச்சர் உட்பட),12 க்கும் குறைவாக இருக்கக் கூடாது (உறுப்பு 164 (1அ)).
92-வது திருத்தச்சட்டம் - 2003
  • எட்டாவது அட்டவணையில் நான்கு மொழிகள்  சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் போடோ, டோக்ரி  (டோங்க்ரி), மைதிலி (மைத்திலி) மற்றும் சந்தாலி. இதன்  மூலம் அரசமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
93-வது திருத்தச்சட்டம் - 2005
  • தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட கல்வி  நிறுவனங்களில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்பினர் அல்லது பட்டியல் இனத்தவர் அல்லது  பழங்குடியினர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய  அதிகாரம் அளித்துள்ளது.
  • இனாம்தார் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை (2005) ரத்து செய்வதற்கு இந்த திருத்தச் சட்டம் இயற்றப்பட்டது.
  • அதில் சிறுபான்மையினர்  மற்றும் சிறுபான்மையினர் அல்லாத, உதவிபெறாத தனியார் கல்லூரிகள், தொழில்சார் கல்லூரிகள் போன்றவற்றிற்கு இது பொருந்தாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
94-வது திருத்தச்சட்டம் - 2006
  • பழங்குடி நலத்துறை அமைச்சர் வேண்டுகோளுக்கிணங்க பீகாரை விடுவித்து அதனை ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கராக விரிவுபடுத்தியது.
  • இது இப்பொழுது,  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாநிலங்களான மத்தியப்  பிரதேசம் மற்றும் ஒரிசா ஆகியவற்றிற்கு பொருந்தும்.
95-வது திருத்தச்சட்டம் - 2009
  • பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட  ஒதுக்கீடு விரிவாக்கப்பட்டது மற்றும் ஆங்கிலோ- இந்தியர்களுக்கு மக்களவையில் பிரத்யேக  பிரதிநிதித்துவம் அளிப்பது மற்றும் மாநில சட்டமன்ற  கூட்டங்களை மேலும் பத்து ஆண்டுகள் வரை விரிவுபடுத்துவது அதாவது 2020ஆம் ஆண்டு வரை  (உறுப்பு 334)
96-வது திருத்தச்சட்டம் - 2011
  • ‘ஒடியா’ – வை ஒரியா என மாற்றி ஒரியா மொழியை  எட்டாவது அட்டவணையில் ஒடியா என்று  உச்சரிக்கப்பட்டது.
CONSTITUTIONAL AMENDMENT TAMIL - INDIAN POLITY NOTES 2023
CONSTITUTIONAL AMENDMENT TAMIL – INDIAN POLITY NOTES 2023
97-வது திருத்தச்சட்டம் - 2011
  • ஒரு அரசமைப்பு அந்தஸ்து மற்றும் கூட்டுறவு  சங்கங்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றது.
  • உறுப்பு 19-ன் கீழ் கூட்டுறவு சங்கங்களை உருவாக்குவதற்கான ஒரு அடிப்படை உரிமையை அளிக்கிறது.
  • இது உறுப்பு  43-பி-ன் வாயிலாக கூட்டுறவு சங்கங்களின் மேம்பாட்டிற்காக புதிய மாநிலக் கொள்கையின்  வழிகாட்டு கோட்பாடுகளை சேர்த்துள்ளது.
  • இது ‘ கூட்டுறவு சங்கம்’ (உறுப்பு 243-ZH to 243-ZT) என்ற  தலைப்பின் அரசமைப்பில் புதிய பகுதி IX-பி ஐ சேர்த்துள்ளது.
98-வது திருத்தச்சட்டம் - 2013
  • ஹைதராபாத்-கர்நாடகா மண்டலத்தை மேம்படுத்துவதற்கு கர்நாடக  ஆளுநருக்கு தரப்படும்  அதிகாரம்.
99-வது திருத்தச்சட்டம் - 2014
  • இது தேசிய நீதி ஆணையத்தை நிறுவுவதற்காக  வழங்கப்பட்டது.
100-வது திருத்தச்சட்டம் - 2014
  • இந்த திருத்தச்சட்டமானது இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையில் நில எல்லை ஒப்பந்தம் (LBA) ஆகும்.
101-வது திருத்தச்சட்டம் - 2016
  • பொருள்கள் மற்றும் சேவை வரி.
102-வது திருத்தச்சட்டம் - 2018
  • பின்தங்கிய வகுப்புகளின் தேசிய ஆணையத்திற்கு  அரசமைப்பு தகுதி.
103-வது திருத்தச்சட்டம் - 2019
  • பொது வகுப்பினருக்கு பொருளாதார ரீதியில்  பலவீனமான பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு.
104-வது திருத்தச்சட்டம் - 2020

104வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (CAA) லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் SC மற்றும் STக்களுக்கான இட ஒதுக்கீட்டை எழுபது ஆண்டுகளில் இருந்து எண்பது ஆண்டுகள் வரை நீட்டித்துள்ளது. 

மேலும் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தினருக்கான இடஒதுக்கீடுகளையும் நீக்கியுள்ளது.

error: Content is protected !!