TNPSC PORTAL

TNPSC EXAM PORTAL,TNPSC,TNPSC EXAM,TNPSC GROUP 1,TNPSC GROUP 2,TNPSC GROUP 4,TNPSC CURRENT AFFAIRS,TNPSC PORTAL CURRENT AFFAIRS, STUDY MATERIALS, ONLINE TESTS, MOCK TESTS, QUIZ, TEST BATCH FOR TNPSC GROUP 4 , THERVUPETTAGAM, GROUP2A,GROUP2, GROUP1,VAO EXAMS.

TNPSC EXAM PORTAL

TNPSC EXAM PORTAL

 

“ உன்னுடைய முயற்சியே

 உன்னுடைய வெற்றியின் முதல் படி”

“ உன்னுடைய தோல்விகளே உன்னை

சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”

 

TNPSC என்பதன் விரிவாக்கம்

TNPSC Tamil Nadu Public Service Commission

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

 

கோச்சிங் சென்டர் செல்லாமல் டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வில் வீட்டிலிருந்து வெற்றி பெற முடியுமா?

இந்தக் கேள்வி பெரும்பாலும் போட்டி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருப்பவர்கள் மனதில் இயல்பாக தோன்றும் ஒரு சந்தேகம்தான்.

ஏன் இப்படி ஒரு சந்தேகம் போட்டித் தேர்வர்கள் மனதில் நிகழ்கிறது?

  • எந்த புத்தகத்தை படிப்பது?
  • எதைப் படிக்க வேண்டும்? 
  • எதைப் படிக்க கூடாது?
  • எப்படி படிக்க வேண்டும்?
  • எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்?
  • எப்படி தேர்வினை அணுக வேண்டும்?
  • எப்படி படித்த பாடத்தில் இருந்து குறிப்பு (Notes Making) எடுக்க வேண்டும்?
  • நடப்பு நிகழ்வுகளுக்கு எவ்வாறு தயார் செய்வது?
  • தேர்வுகள் எழுதி அதை பயிற்சி செய்வதன் (Test Practice) முக்கியத்துவம்?
  • நேர மேலாண்மையின் முக்கியத்துவம்?
  • குறைந்த நேரத்தில் எப்படி Revision செய்வது?

 

TNPSC EXAM PORTAL

 

 

உங்களது சந்தேகங்களுக்கு எங்களது பதில்கள் பின்வருமாறு,

எந்த புத்தகத்தை படிப்பது?

பொதுத்தமிழ் – POTHU TAMIL

  • ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் தமிழ் புத்தகம் படிக்க வேண்டும்.

6th to 12th Std New Samacheer tamil books.

  • ஒரு சில பாடங்கள் பழைய சமச்சீர் தமிழ் புத்தகத்தில் இருந்து படிக்க வேண்டும்.
  • TNPSC GROUP 2, TNPSC GROUP 2A, TNPSC GROUP 4, VAO, EO EXAMS ➨ முந்தைய வருட வினாத்தாள்களை பயிற்சி செய்ய வேண்டும்.
  • குறைந்தது ஐந்து வருட வினாத்தாள்கள் பயிற்சி செய்வது நல்லது. தமிழில் ஒரு சில கேள்விகள் திரும்பத்திரும்ப இடம்பெறும்.
  • பொதுத்தமிழ் பகுதியில் இடம்பெறும் கேள்விகளின் எண்ணிக்கை ➨ 100

 டிஎன்பிஎஸ்சி சிலபஸை அடிப்படையாக வைத்து பொதுத்தமிழ் கேள்விகளின் எண்ணிக்கை,

  • இலக்கணத்திலிருந்து ➨ 25 வினாக்கள் முதல் 32 வினாக்கள் வரை கேட்கப்படும்.
  • இலக்கியத்திலிருந்து ➨ 33 வினாக்கள் முதல் 37 வினாக்கள் வரை கேட்கப்படும்.
  • தமிழ் அறிஞர்கள் பகுதியிலிருந்து ➨ 34 வினாக்கள் முதல் 38 வினாக்கள் வரை கேட்கப்படும்.

தமிழ் பாட புத்தகத்தை அடிப்படையாக வைத்து கேள்விகளின் எண்ணிக்கை,

புதிய பாட புத்தகத்தை (NEW SAMACHEER BOOKS) படித்தால்,

  • 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 28 முதல் 35 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.
  • 9 முதல் 10 ஆம் வகுப்பு வரை 45 முதல் 55 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.
  • 11 முதல் 12 ஆம் வகுப்பு வரை 10 முதல் 15 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.

பழைய பாட புத்தகத்தை (OLD SAMACHEER BOOKS ) படித்தால்,

  • ஒருசில பாடத்தை மட்டும் படிக்க வேண்டும்.
  • 4 முதல் 8 கேள்விகள் வரை TNPSC வினாத்தாளில் இடம்பெறும்.

 

பொது அறிவியல் – GENERAL SCIENCE 

  • 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும்.

6th to 10th Std New Samacheer Science books.

  • ஒருசில பாடத் தலைப்புகள் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு (Chemistry, Physics, Biology books) புத்தகம் படிக்க வேண்டும்.

 

நடப்பு நிகழ்வுகள் – CURRENT AFFAIRS 

  • தினமணி செய்தித்தாள் / தமிழ் ஹிந்து செய்தித்தாள் படிக்க வேண்டும்.

Read also,

www.tnpscexamportal.com

 

புவியியல் – GEOGRAPHY 

  • 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – புவியியல் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)

6th to 10th Std New Samacheer Social Science books – Geography Portions. 

  • ஒருசில பாடத் தலைப்புகள் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு புவியியல் (Geography Books) புத்தகம் படிக்க வேண்டும்.

 

இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம் – HISTORY AND CULTURE OF INDIA 

  • 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – வரலாறு பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)

6th to 10th Std New Samacheer Social Science books – History Portions. 

  • 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு (History Books) புத்தகம் படிக்க வேண்டும்.

India and Tamil Nadu Culture

11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” புத்தகம் படிக்க வேண்டும்.

 

இந்திய அரசியலமைப்பு – INDIAN POLITY 

  • 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – குடிமையியல் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)

6th to 10th Std New Samacheer Social Science books – Civics Portions. 

  • 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் (Political Science Books) புத்தகம் படிக்க வேண்டும்.

Read Also,

Indian Polity by M Laxmikanth – English medium students 

இந்திய அரசியலமைப்பு  – க. வெங்கடேசன் – Tamil medium students

 

இந்திய பொருளாதாரம் – INDIAN ECONOMY

  • 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – பொருளியல் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)

6th to 10th Std New Samacheer Social Science books – Economics Portions. 

  • 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு இந்திய பொருளாதாரம் (Indian Economy Books) புத்தகம் படிக்க வேண்டும்.

 

இந்திய தேசிய இயக்கம் – INDIAN NATIONAL MOVEMENT

  • 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள புதிய சமச்சீர் சமூக அறிவியல் புத்தகம் படிக்க வேண்டும். (அதாவது சமூக அறிவியல் புத்தகம் – வரலாறு/ இந்திய தேசிய இயக்கம் பாடத் தலைப்புகள் சிலபஸை வைத்து படிக்க வேண்டும்)

6th to 10th Std New Samacheer Social Science books – History/Indian National movement Portions. 

  • 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு வரலாறு (History Books) புத்தகம் படிக்க வேண்டும்.

 

தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்

State Board School Books 6-12th Std (Syllabus areas in all subjects, including ethics books)

Government Policy Notes.

References

Official Government Sources:

https://www.tn.gov.in/scheme

 

தமிழ்நாட்டின் வரலாறு, மரபு பண்பாடு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்

State Board School Books 6-12th Std (Syllabus areas in all subjects, including ethics books)

 

APTITUDE AND MENTAL ABILITY 

6th to 10th Std Maths Books Enough. (TNPSC Aptitude Syllabus Portions Only)

TNPSC Previous Year Question Papers Practice.

 

எதைப் படிக்க வேண்டும்? 

மேற்குறிப்பிட்டுள்ள புத்தகங்களை டிஎன்பிஎஸ்சி சிலபஸை வைத்து பாடவாரியாக படிக்க வேண்டும்.

பொதுத்தமிழ் பாடத்திட்டத்திற்கு, பாட வாரியாகவும் அதாவது 6வது தமிழ் புத்தகம் முதல் 12வது தமிழ் புத்தகம் வரை தொடர்ந்து படித்து முடிக்கலாம். அதில் தவறு ஏதும் இல்லை. சிலபஸை கையில் வைத்துக்கொண்டு படித்தால் எளிதாக படித்து முடித்துவிடலாம்.

 

எதைப் படிக்க கூடாது?

ஆனால், பொதுஅறிவு பாடத்திட்டத்திற்கு அவ்வாறு புத்தகம் வாரியாக 6வது முதல் 12வது வரை புத்தகங்களை தொடர்ந்து படிக்க கூடாது. சிலபஸை வைத்துக்கொண்டுதான் படிக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக படித்து முடிக்க முடியும்.

 

எப்படி படிக்க வேண்டும்?

முதலில் கவன சிதறல் இல்லாத ஒரு சுற்றுச்சூழலை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதாவது படிப்பதற்கான இடத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். அந்த இடம் வீடாக இருக்கலாம் அல்லது நூலகமாக இருக்கலாம். பின்பு படிப்பதற்காக நீங்கள் ஒரு அட்டவணையை போட வேண்டும்.

அடுத்ததாக நீங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்திற்கு சென்று, டிஎன்பிஎஸ்சி கொடுத்திருக்கும் சிலபஸை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஎன்பிஎஸ்சி சிலபஸை பிரிண்ட் எடுத்துவிட்டு அதை ஒரு முறைக்கு இருமுறை படித்து பார்க்க வேண்டும். பிறகு, டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு என்ன தேவை? டிஎன்பிஎஸ்சி என்ன தேவை இல்லை? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறகு சிலபஸை வைத்து நீங்கள் பாடத்தை படித்து முடிக்க வேண்டும். படிக்கும் போது கட்டாயமாக முந்தைய வருட வினாத்தாள்களை பார்க்க வேண்டும். கேள்விகள் எவ்வாறு முந்தைய வருட வினாத்தாளில் அமையப் பெற்றுள்ளன என்பதை புரிந்து அதற்கேற்றவாறு படிக்கவேண்டும்.

 

எவ்வளவு நேரம் படிக்க வேண்டும்?

டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு நீங்கள் வேலை செய்து கொண்டு பகுதி நேரமாக படிப்பவர்கள் எனில், 3 முதல் 4 மணி நேரம் குறைந்தது படிக்க வேண்டும். 

டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு நீங்கள் முழு நேரமாக படிப்பவர்கள் எனில், குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தினமும் தொடர்ந்து படிக்க வேண்டும்.

 

எப்படி தேர்வினை அணுக வேண்டும்?

பதட்டமில்லாமல் மற்றும் தேர்வினை பற்றிய பயமில்லாமல் முதலில் நீங்கள் இருக்க வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி கொடுத்திருக்கும் சிலபஸை அடிப்படையாக வைத்து,

நேரத்தை சரியாக திட்டமிட்டு, முந்தைய வருட வினாத்தாள்களை பயிற்சி செய்து, பிறகு பாடங்களைப் படித்து முடிக்க வேண்டும்.

 

எப்படி படித்த பாடத்தில் இருந்து குறிப்பு (Notes Making) எடுக்க வேண்டும்?

தற்போது எண்ணற்ற வலைதளங்கள் வந்துவிட்டது. இதிலிருந்து நீங்கள் குறிப்பு எடுக்கலாம்.

நீங்கள் பாடத்திட்டத்தை பள்ளி பாடப் புத்தகத்தில் இருந்து படித்து முடித்த பின்பு, நீங்களாகவே குறிப்பு எடுக்கலாம் அல்லது வலைதளத்தை பயன்படுத்தி குறிப்பு எடுக்கலாம்.

எவ்வாறு குறிப்பு எடுக்க வேண்டும் – மனவரைபடம் ஆகவும், கையெழுத்துப் பிரதியாகவும், டிஜிட்டல் நோட்சாகவும், வரைப்படமாகவும் குறிப்பு எடுக்கலாம்.

Methods of Notes Making

Mind map, Flow Diagram, charts, Tables, Shortcuts, Digital Notes, Hand written Notes…

 

நடப்பு நிகழ்வுகளுக்கு எவ்வாறு தயார் செய்வது?

தினமணி செய்தித்தாள் / தமிழ் ஹிந்து செய்தித்தாள் படிக்க வேண்டும்.

Read also,

www.tnpscexamportal.com

 

தேர்வுகள் எழுதி அதை பயிற்சி செய்வதன் (Test Practice) முக்கியத்துவம்?

நீங்கள் தொடர்ந்து புத்தகங்களை படித்துக் கொண்டு மட்டுமே இருந்தால், உங்களது படிப்பு திறனை மதிப்பீடு செய்ய முடியாது. ஆதலால் தேர்வு எழுதுவதன் மூலம் உங்களது பலம் மற்றும் பலவீனம் தெரியவரும். அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் உங்களது படிக்கும் திறனை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும்.

 

நேர மேலாண்மையின் முக்கியத்துவம்?

திட்டமிட்டு படிப்பதன் மூலம் பாடத்தை எளிதாக படித்து முடித்து விடலாம்.

தொடர் பயிற்சிக்கு நேர மேலாண்மையின் பங்கு மிக முக்கியம்.

ஒரு நாளை 4 பகுதியாக பிரிக்க வேண்டும். அதாவது,

  • முதல் பகுதி – பொதுத்தமிழ்
  • இரண்டாம் பகுதி – பொது அறிவு
  • மூன்றாம் பகுதி – கணிதம்
  • நான்காம் பகுதி – தினசரி செய்தி வாசிப்பு மற்றும் முந்தைய வருட வினாத்தாள்களை பயிற்சி செய்தல்.

வாரத்தில் இரு நாட்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் Revision and Test Practice செய்ய வேண்டும். 

 

குறைந்த நேரத்தில் எப்படி Revision செய்வது?

உங்களது பாடக்குறிப்புகள் (Your Subject Notes) ஒவ்வொரு பாடத்திற்கும் 50 பக்கத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக Revision செய்ய முடியும்.

நீங்கள் படித்ததை மட்டும் தொடர்ந்து Revision செய்ய வேண்டும். அதாவது வாரத்தில் இரு நாட்களில் Revision செய்ய வேண்டும்.

 

[simple-sitemap-group]

 

error: Content is protected !!